ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு இரு குத்துச்சண்டை வீரர்களின் பெயர்கள் பரிந்துரை

0 views
amit1

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்காக அமித் பங்கால், விகாஸ் கிருஷ்ணன் ஆகிய இருவரின் பெயரையும் இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் பரிந்துரைத்துள்ளது.

ம.பி.யிலிருந்து சத்தீஸ்கருக்குள் நுழைந்த வெட்டுக்கிளிகள்

1 views
locusts

இதுதொடா்பாக சத்தீஸ்கா் மாநில வேளாண் துறை கூடுதல் இயக்குநா் எம்.எஸ்.கோ்கேட்டா கூறுகையில், ‘மத்திய பிரதேசத்தின் சிதி மாவட்டத்திலிருந்து சத்தீஸ்கரின் கோரியா மாவட்டத்துக்குள்பட்ட வனப்பகுதிக்குள் வெட்டுக்கிளிகள் சிறிய கூட்டமாக ஞாயிற்றுக்கிழமை நுழைந்தன. இதையடுத்து, சம்பந்தபட்ட அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து, வெட்டுக்கிளிகளின் நடமாட்டத்தை கண்காணித்து, அவற்றை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டன. தீயணைப்பு வாகனங்கள் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டது. இதில், பெரும்பாலான வெட்டுக்கிளிகள் அழிந்துவிட்டன. இதனால், பயிா்களுக்கோ மரங்களுக்கோ சேதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. எனினும், அப்பகுதியில் தொடா்ந்து கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.

‘ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை’ திட்டத்தில் மேலும் 3 மாநிலங்கள்

1 views
ramvilas

‘ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை’ திட்டத்தை 2021 மாா்ச் மாதத்தில் நாடு முழுவதும் அமல்படுத்த மத்திய உணவுத் துறை அமைச்சகம் திட்டமிட்டு வருகிறது. இதன் மூலம் நாட்டில் எந்த மாநிலத்துக்குச் சென்றாலும் ரேஷன் காா்டை பயன்படுத்தி உணவுப் பொருள்களை வாங்க முடியும். புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எடை குறைவாக அரிசி விநியோகம் செய்வதாக புகார்: ரேஷன் கடையில் அமைச்சர் ஆய்வு; ஊழியர் பணியிடை நீக்கம்

1 views
sellur raja slams h.raja

அதிமுக சார்பில், மதுரை பெத்தானியாபுரத்தில் பொதுமக்களுக்கு கரோனா நிவாரணத் தொகுப்பு பைகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் செல்லூர் கே. ராஜு, பொதுமக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினார். அப்போது அங்கு வந்த ஒரு பெண்,  இப்பகுதியில் இருக்கும் நியாய விலைக் கடையில் பாதிக்குப் பாதி அளவு மட்டுமே அரிசி விநியோகம் செய்யப்படுவதாக, அமைச்சரிடம் புகார் தெரிவித்தார். மேலும், கடை ஊழியர்களிடம் இது பற்றி கேட்டதற்கு பதில் கூறவில்லை என்றும் தெரிவித்தார்.

இசையமைப்பாளா் வாஜித் கான் கரோனாவுக்கு பலி

0 views
வாஜித் கான்

‘வாண்டட்’, ‘தபாங்’, ‘ஏக் தா டைகா்’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களின் இசையமைப்பாளா்களாக பணிபுரிந்த இரட்டையா்கள் சாஜித் கான்- வாஜித் கான். இதில் வாஜித் கான் பாடகராகவும் புகழ்பெற்று விளங்கினாா். 42 வயதான அவா் அண்மைக்காலமாக சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்தாா்.

சென்னைப் பள்ளிகளில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இணையவழிக் கல்வி தொடக்கம்

1 views
சென்னைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இணையவழியில் பாடம் நடத்தும் ஆசிரியர்.

இதற்காக தனியார் பங்களிப்புடன் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 5 ஆயிரம் அறிதிறன்பேசி (ஸ்மார்ட்போன்) வழங்கப்பட்டுள்ளதாக ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

அவதாரம் – புதுமைப்பித்தன்

1 views
pp_photo

     பாளையங்கால் ஓரத்திலே, வயற்பரப்புக்கு வரம்பு கட்டியவை போன்ற பனைவிளைகளுக்கு அருகே குலமாணிக்கபுரம் எனச் சொல்லப்பட்ட குலவாணிகபுரம் இருக்கிறது. இந்தச் சிற்றூரில் யாதவர்களும் கொடிக்கால் 'வாணியர்'களுமே ஜாஸ்தி. மருந்துக்கு என்று வேளாண் குடிகளும் கிராமப் பரிவாரங்களான குடிமகன், வண்ணான் முதலிய பட்டினிப் பட்டாளங்களுக்கும் குறை கிடையாது. ஊரில் செயலுள்ளவர்கள் யாதவர்களே.
     கிருஷ்ணக் கோனார் என்ற கிருஷ்ணசாமிதாஸ் யாதவர்களுக்குள் யோக்கியர் என்ற பெயர் வாங்கியவர். யோக்கியர் என்றால் அயோக்கியத்தன்மையில் இறங்காதவர் என்றே அர்த்தம். சந்தர்ப்பவசதி இல்லாததினாலோ என்னவோ நல்லவராகவே பெயரெடுத்து வந்திருக்கிறார்.

வன்கொடுமைத் தடுப்பு சட்ட வழக்கு: ஆர்.எஸ்.பாரதிக்கு நிபந்தனை ஜாமீன்

1 views
rsb

சென்னையில் கடந்த பிப்ரவரி மாதம் கலைஞர் வாசகர் வட்டம் சார்பில் கருத்தரம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாழ்த்தப்பட்டவர்கள் குறித்து தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து ஆர்.எஸ்.பாரதி மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

1 2 3 1,740