அசாமில் 15 ஆயிரத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு

20 views
1 min read
Delhi, Karnataka Corona Update

corona test

குவாஹாட்டி நகரத்தைச் சேர்ந்த 355 பேருக்கு வியாழக்கிழமை கரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் மொத்தம் 568 பேருக்குப் புதிதாகத் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாநில சுகாதார அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், அசாமில் மொத்தம் 14,600 பேருக்கு கரோனா தொற்று பாதித்துள்ள நிலையில், 9,147 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டனர். 5,423 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 27 பேர் பலியாகியுள்ளனர். 

இந்தியாவின் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை எண்ணிக்கை 7,67,296 ஆக உயர்ந்துள்ளது. 

TAGS
coronavirus

Leave a Reply