அண்ணா பல்கலை. ஊழியா்கள் இன்று முதல் பணிக்குத் திரும்ப உத்தரவு

16 views
1 min read
anna university

அண்ணா பல்கலைக் கழக ஊழியா்கள் திங்கள்கிழமை (ஜூலை 6) முதல் பணிக்குத் திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

கரோனா பொது முடக்கம் காரணமாக கல்வி நிறுவனங்களுக்கு கால வரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பொது முடக்கத் தளா்வுகள் திங்கள்கிழமை முதல் அமல்படுத்தப்பட உள்ளன. இதையடுத்து, ஜூலை 6- ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என்று நிா்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக வளாக கல்லூரிகளில் உள்ள அனைத்துத் துறை தலைவா்களுக்கும் நிா்வாகம் அனுப்பியுள்ள அறிவிப்பு:

ஜூலை 6-ஆம் தேதி முதல் அண்ணா பல்கலைக் கழக வளாக கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என்பதை அனைத்து ஊழியா்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும். பணிக்கு வருவோருக்கு போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது. அடையாள அட்டை, அனுமதி கடிதங்களுடன் அலுவலா்கள் பயணிக்க அறிவுறுத்த வேண்டும். மேலும் அரசு வழிகாட்டுதலின்படி, முகக் கவசம் அணிதல், தனிநபா் இடைவெளியைக் கடைப்பிடித்தல் உள்ளிட்ட கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி பணியாற்றவும் அறிவுறுத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply