அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை: அமைச்சர் ஜெயக்குமார்

21 views
1 min read
jayakumar1

அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: அதிமுகவிலோ, ஆட்சியிலோ சசிகலாவுக்கு இடமில்லை என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம், சசிகலா விடுதலை குறித்து கேட்கப்பட்டபோது அவர் இவ்வாறு பதிலளித்தார்.

சசிகலா விவகாரத்தில் ஏற்கனவே அதிமுக எடுத்த முடிவே நாளையும் தொடரும். சிறையில் இருந்து நாளை சசிகலா விடுதலையானாலும் அதிமுகவில் அவருக்கு இடமில்லை. ஒரு குடும்பத்தைத் தவிர மற்ற அனைவரும் அதிமுகவுக்கு வரலாம் என்றும் ஜெயக்குமார் கூறினார்.

சசிகலா விரைவில் சிறையில் இருந்து விடுதலையாவார் என கூறப்படும் நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் இந்த பதிலை அளித்துள்ளார்.

அதே சமயம், சசிகலா விவகாரத்தில் ஓ.எஸ். மணியன் கருத்து அவரது தனிப்பட்ட கருத்து என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு பெங்களுரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் விடுதலையாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

TAGS
sasikala

Leave a Reply