அமிதாப் பச்சனிடம் நலம் விசாரித்தார் நடிகர் ரஜினிகாந்த்

16 views
1 min read
rajinikanth video removed from twitter

கரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனை தொலைபேசியில் தொடர்புகொண்டு நடிகவர் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார்.  

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஹிந்தி திரை நட்சத்திரம் அமிதாப் பச்சன் (77) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுதொடா்பாக சுட்டுரையில் அவா் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘நான் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். எனது குடும்பத்தினா், பணியாளா்களிடம் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வரவேண்டியுள்ளது. என்னை கடந்த 10 நாள்களில் சந்தித்த அனைவரும் கரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்தாா்.

இதேபோல் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனும் (44) கரோனா நோய்த்தொற்றால் பாதிப்பட்டுள்ளாா். இதுதொடா்பாக அவா் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘எனது தந்தையும், நானும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவருக்கும் மிதமான அறிகுறிகள் தென்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோம். அனைவரும் அமைதியுடன் இருக்குமாறும், அச்சமடைய வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளாா்.

இதையடுத்து தந்தையும், மகனும் மும்பையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்த நிலையில் கரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனை தொலைபேசியில் தொடர்புகொண்டு நடிகவர் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார்.  அப்போது அவருடைய உடல்நலம், மருத்துவ சிகிச்சைகள் உள்ளிட்டவை குறித்துக் கேட்டறிந்துள்ளார் ரஜினி.

இதனிடையே அமிதாப் பச்சனும், அவரது மகனான அபிஷேக் பச்சனும் கரோனா பாதிப்பில் இருந்து விரைவில் மீண்டும் வர வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதேபோல் சச்சின், சிரஞ்சீவி, மகேஷ் பாபு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் அமிதாப் பச்சன் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என டிவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். 

TAGS
Rajinikanth

Leave a Reply