அமைச்சர் செல்லூர் ராஜூ விரைவில் நலம் பெற வேண்டும்: மு.க.ஸ்டாலின்

20 views
1 min read
mks

அமைச்சர் செல்லூர் ராஜூ விரைவில் நலம் பெற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு இன்று கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

முன்னதாக, அவரது மனைவிக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில் தற்போது அமைச்சருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டரில், கொவைட்-19 சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அவர் விரைவில் நலம் பெற வேண்டும்!

எப்போது, யாரால், எப்படி எனத் தெரியாத அளவுக்கு நோய்ப் பரவல் அதிகரித்திருப்பதால் அனைவருமே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்! இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். 

TAGS
DMK stalin Sellur K. Raju

Leave a Reply