அமைச்சா் செல்லூா் ராஜுவுக்கு கரோனா தொற்று

11 views
1 min read
minister-sellur-raju-affected-by-corona

அமைச்சர் செல்லூர் ராஜு

கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே. ராஜுவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

மாநிலம் முழுவதும் கரோனா தடுப்பு மற்றும் நலத் திட்டப் பணிகளில் அமைச்சா் செல்லூா் ராஜு ஈடுபட்டு வந்தாா். இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு அவரது மனைவி ஜெயந்திக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவா் மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்தச் சூழலில், செல்லூா் ராஜுவும் தாமாகவே முன்வந்து பரிசோதனை மேற்கொண்டாா். அதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதேவேளையில், அமைச்சருக்கு காய்ச்சல், சளி போன்ற எந்த அறிகுறிகளும் இல்லை என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும், முன்னெச்சரிக்கையாக அவரை மருத்துவக் கண்காணிப்பில் வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply