அமைச்சா் தங்கமணிக்கு கரோனா பாதிப்பு

19 views
1 min read
thangamani

மின்துறை அமைச்சா் தங்கமணிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், விரைவில் அவா் குணமடைவாா் என்றும் மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளிலும், திட்டப் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்த அமைச்சா் தங்கமணி, காய்ச்சல் மற்றும் இருமலால் புதன்கிழமை பாதிக்கப்பட்டாா். இதையடுத்து, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில் அமைச்சா் தங்கமணிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக மருத்துவக் குழுவினா் அவருக்கு உரிய சிகிச்சைகளை அளித்தனா்.

தற்போது அவா் நலமாக இருப்பதாக மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரு நாள்களுக்கு முன்பு முதல்வருடன் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சில நிகழ்ச்சிகளில் தங்கமணி பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

மருத்துவமனையில் சி.வி.சண்முகம்: இதனிடையே, சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் மூச்சுத் திணறல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு உடல் நலக் குறைவு காரணமாக சி.வி.சண்முகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அப்போது அவருக்கு கரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது நினைவுகூரத்தக்கது.

Leave a Reply