அம்பை வட்டாரத்தில் சனி, ஞாயிறு இரண்டு நாள்கள் முழு அடைப்பு

14 views
1 min read
அம்பாசமுத்திரத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள்

அம்பாசமுத்திரத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள்

அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரம் விக்கிரமசிங்கபுரம் கல்லிடைக்குறிச்சி பகுதிகளில் சனி, ஞாயிறு இரண்டு நாள் முழு கடையடைப்பு என காவல் துணை கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார். 

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அம்பாசமுத்திரம் வட்டாட்சியர், வனத் துறை துணை இயக்குநர், அரசு மருத்துவமனை செவிலியர்கள், தனியார் மருத்துவமனை மருத்துவரின் உறவினர்கள் உள்பட பலருக்கு கரோனா தொற்று உறுதியானது. 

இதையடுத்து நேற்று அம்பாசமுத்திரம் பஜாரின் ஒரு பகுதி மட்டும் முழு அடைப்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அம்பாசமுத்திரம் நகரம் முழுவதும் முழு அடைப்பு செய்யக் கோரி சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனர். 

இதையடுத்து வியாழக்கிழமை அம்பாசமுத்திரம் காவல் துணை கண்காணிப்பாளர் சுபாஷினி தலைமையில் அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், கல்லிடைகுறிச்சி பகுதி வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வியாபாரி சங்க நிர்வாகிகளுடன் மேற்கொண்ட ஆலோசனையடுத்து கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் பகுதிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழுக் கடை அடைப்பு செய்வது என்றும்  ஜுலை 13 திங்கள் முதல் ஜூலை 18 சனிக்கிழமை வரை மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்க வேண்டும் என்றும் அம்பாசமுத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சுபாஷினி அறிவித்தார்.

மேலும் அம்பாசமுத்திரம் நகரம் முழுவதும் தீயணைப்புத்துறை வண்டி மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு  தூய்மை பணி  மேற்கொள்ளப்பட்டது.

Leave a Reply