’அயோத்தியில் ராமர் சிலைக்கு மீசை இல்லையென்றால்…’ இந்துத்துவா தலைவர் வைக்கும் கோரிக்கை

95 views
1 min read
’அயோத்தியில் ராமர் சிலைக்கு மீசை இல்லையென்றால்...’ இந்துத்துவா தலைவர் வைக்கும் கோரிக்கை

அயோத்தியில் ராமர் கோயிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார். இதனை ஒட்டி, அயோத்தி நகரமே வண்ண விளக்குகளால் ஜொலித்து வருகிறது.
இந்த நிலையில், இந்துத்துவா தலைவரான சம்பாஜி பிதே, ராமர் மற்றும் லட்சுமணன் சிலைக்கு மீசை இருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அயோத்தி அருகே உள்ள சங்லி என்ற பகுதியில் அவர் பேசுகையில், ”நீங்கள் நிறுவப் போகிற ராமர், லட்சுமணன் சிலைகளுக்கு மீசை இருக்க வேண்டும் என்று கோவிந்த் கிரிஜி மகாராஜிடம் (கோயில் அறக்கட்டளையின் அறங்காவலர்) கேட்டுள்ளேன்.
நீங்கள் தவறுகளைச் சரிசெய்யாவிட்டால் (ராமர் சிலைகளுக்கு மீசை இல்லாமல் போனால்) கோயில் கட்டப்பட்டாலும், என்னைப் போன்ற ராமர் பக்தருக்கு, அது பயனில்லை என்று கூறியுள்ளேன்” எனத்தெரிவித்தார். இதற்கிடையே, அயோத்திக்கு சென்ற உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அடிக்கல் நாட்டு விழாவுக்கான பணிகளை ஆய்வு செய்தார். சரயு நதிக்கரையில் சிறப்பு ஆரத்தி எடுக்கும் இடங்களையும் அவர் பார்வையிட்டு, அதிகாரிகளுக்கு ஆலோசனை கூறினார்.
முதலமைச்சர் வருகையை ஒட்டி பூக்களால் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. ஹனுமன் கர்ஹி என்ற இடத்தில் வழிபாடு செய்த யோகி ஆதித்யநாத், ராம் கி பவ்டி என்ற இடத்தில் நீர்நிலைகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள இடங்களில் செய்யவேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனைகளை தெரிவித்தார்.

Leave a Reply