அரசுப் பணிகளில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

20 views
1 min read
CM EPS writes a letter to PM modi

அரசுப் பணிகளில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக புதனன்று பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

 

சென்னை: அரசுப் பணிகளில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக புதனன்று பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘கிரிமிலேயர் வரம்பு கணக்கீட்டில் புதிய திருத்தம் கொண்டு வரப்பட்டால், ஏராளமான தகுதிவாய்ந்த ஓபிசி மாணவர்கள் அரசுப்பணிகள் மற்றும் வேலைவாய்ப்புகளில் சலுகைகளைப் பெறமுடியாத நிலை ஏற்படும் என்றும், எனவே இதுதொடர்பான மத்திய அரசின் முடிவைத் திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும், ‘27% இடஒதுக்கீடு கணக்கீட்டில் பழைய முறையே தொடர வேண்டும்; ஓபிசி பிரிவினருக்கு தமிழக அரசின் இடஒதுக்கீடு முறையை மத்திய அரசு பணியிலும் பின்பற்ற வேண்டும்’ என்றும் அவர் தனது கடிதம் வாயிலாக கோரிக்கை வைத்துள்ளார்.

Leave a Reply