அரபு நாடு : 114 பேர் லோயர் கேம்ப் வழியாக தமிழகம் வருகை

16 views
1 min read
New Lockdown regulations in Theni, Bodi and Kambam Municipalities

கம்பம்: அரபு நாடுகளில் வேலை செய்த 114 தமிழக தொழிலாளர்கள் லோயர் கேம்ப் வழியாக திங்கள் கிழமை தமிழகம் வந்தனர்.

தேனி மாவட்டம் லோயர் கேம்ப் சோதனை சாவடி தமிழக கேரள எல்லையில் உள்ளது. திங்கள்கிழமை லோயர் கேம்ப் சோதனை சாவடிக்கு அரபு நாடுகளில் வேலை செய்த தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள தொழிலாளர்கள், கேரள மாநிலம் கொச்சி விமான நிலையம் வந்து அங்கிருந்து குமுளி வழியாக வருவதாக தேனி மாவட்ட ஆட்சியர் ம. பல்லவி பல்தேவ்விற்கு தகவல் கிடைத்தது. 

அதன் பேரில் அரபு நாடுகளில் இருந்து வரும் தொழிலாளர்களை தமிழகத்திற்கு கொண்டு வர உத்தரவிட்டார்.

கம்பம் வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார் 114 பேர்களையும் குமுளியில் இருந்து லோயர் கேம்ப் அழைத்து வந்தார்.

தூத்துக்குடி – 2, ராமநாதபுரம் – 30, தஞ்சாவூர் -23, கடலூர் – 15, கள்ளக்குறிச்சி 7, பெரம்பலூர் – 1, மயிலாடுதுறை – 2, காரைக்கால் – 6, திருப்பூர் – 1. விருதுநகர் – 1, நாகபட்டணம் – 7, திண்டுக்கல் – 1, வேலூர் – 2, சேலம் – 1, சென்னை – 1, புதுக்கோட்டை – 3, ஹைதராபாத் – 1, சிவகங்கை – 2, தென்காசி – 1, ஈரோடு – 1, திருவாரூர் – 5, ஆகிய மொத்தம் 114 பேர்களுக்கு அவரவர் மாவட்டங்களுக்கு செல்ல உடனடியாக இ – பாஸ் வழங்கப்பட்டது.

பின்னர் அனைவருக்கும் மதிய உணவு வருவாய்த்துறை மூலமாக வழங்கப்பட்டு தனியார் வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது பற்றி சோதனைச் சாவடி அலுவலர் ஒருவர் கூறுகையில், அரபு நாடுகளில் வேலை செய்த தமிழக தொழிலாளர்கள் 114 பேர்கள் இ-பாஸ் மூலம் அவர்களது சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அங்கு அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் கரோனா தொற்று பரிசோதனை செய்ய உள்ளனர் என்று தெரிவித்தார்.
 

Leave a Reply