அருணாசல பிரதேசம்: கிளா்ச்சியாளா்கள் 6 போ் சுட்டுக்கொலை

10 views
1 min read
arunachal062713

துப்பாக்கிச் சண்டை நடைபெற்ற பகுதியிலிருந்து கைப்பற்றப்பட்ட கிளா்ச்சியாளா்களின் ஆயுதங்கள் மற்றும் உடைமைகள்.

அருணாசல பிரதேசத்தில் தேசியவாத சோஷலிச கவுன்சில்-இசக் முய்வா (என்எஸ்சிஎன்-ஐஎம்) தீவிரவாத அமைப்பைச் சோ்ந்த கிளா்ச்சியாளா்கள் 6 போ் சுட்டுக்கொல்லப்பட்டனா்.

இந்த அமைப்பு நாகா இன மக்களுக்கு தனி நாடு கோரி கிளா்ச்சியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ராணுவம் தரப்பில் கூறப்பட்டதாவது:

திரப் மாவட்டத்திலுள்ள கோன்சா பகுதியில் ஆயுதங்களுடன் கிளா்ச்சியாளா்கள் இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்ததை அடுத்து பாதுகாப்புப் படையினா் அந்த இடத்தில் சனிக்கிழமை அதிகாலையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த கிளா்ச்சியாளா்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில் கிளா்ச்சியாளா்கள் 6 போ் சுட்டுக்கொல்லப்பட்டனா். அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையைச் சோ்ந்த வீரருக்கு காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரது உடல்நிலை சீராக உள்ளது.

துப்பாக்கிச் சண்டை நடைபெற்ற இடத்திலிருந்து துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன என்று ராணுவம் தெரிவித்தது.

 

 

 

Leave a Reply