அறந்தாங்கி அருகே அரசு மதுபானம் ஏற்றி சென்ற கனரக வாகனம் கவிழ்ந்து விபத்து

17 views
1 min read
accident

விபத்துக்குள்ளான கனரக வாகனம்

 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மீமிசல் கிழக்கு கடற்கரை சாலையில் அரசு மதுபானம் ஏற்றி வந்த கனரக வாகனம் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
 
மன்னார்குடியிலிருந்து அரசு மதுபானங்களை ஏற்றி கொண்டு கிழக்குக் கடற்கரை சாலை வழியாக ராமநாதபுரம் கொண்டு சென்ற பொழுது மீமிசல் அருகாமையில் உப்பளம் சாலை அருகே கனரக வாகனம் ஓட்டுநர் குணசேகரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் தலைகுப்புற கவிழ்ந்தது. 

இதில் ஓட்டுனருக்கு எந்த காயமும் இன்றி உயிர் தப்பினார். வாகனத்தில் ஏற்றி வந்த அரசுமதுபானத்தின் மதிப்பு சுமார் 12 லட்ச ரூபாய் ஆகும். உடனடியாக விபத்து குறித்து அறிந்த மீமிசல் காவல் துறையினர் சம்பவ இடத்திற்க்கு வந்த காரணத்தால் மதுபானங்கள் திருட்டிலிருந்து தப்பியது.

TAGS
crashed

Leave a Reply