அறந்தாங்கி: தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் பட்டினிப் போராட்டம்

15 views
1 min read
aranthangi

தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் பட்டினி போராட்டம்

 

அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்கள் அனைவரும் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி அவர்கள் பணிபுரியும் பள்ளி வளாகத்தில் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து இன்று ஒரு நாள் பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பாக புதுக்கோட்டை மாவட்ட தலைவர் மீமிசல் சங்கித் பள்ளி தாளாளர் ஆசிரியர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். 

அதேபோல அறந்தாங்கி செலக்சன் மெட்ரிக் மேல்நிலை பள்ளி முதல்வர். சுரேஷ்குமார், அன்னை மீனாட்சி நாச்சியார் பள்ளி தாளாளர் டி.என்.எஸ்.நாகராஜன், ஐடியல் பள்ளி தாளாளர் பி.சேக்சுல்தான் உள்ளிட்ட பல்வேறு பள்ளி வளாகங்களில் ஆசிரியர்கள் ஆசிரியைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

TAGS
protest

Leave a Reply