அவிநாசியில் இளம் தம்பதிக்கு கரோனா

16 views
1 min read
Hyderabad_Coronavirus_Testing_EPS_Final

 

அவிநாசி: அவிநாசி சூளையில் இளம் தம்பதியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவிநாசி சூளை பகுதியைச் சேர்ந்த ஆண்(29), இவரது மனைவி(28). இவர்கள் இருவரும் குழந்தை பிறப்பிற்காக திண்டுக்கல்லிற்கு சென்று விட்டு அவிநாசி திரும்பியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். இதற்கிடையில் மனைவியின் தந்தைக்கும், தம்பிக்கும் திண்டுக்கல்லில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு திண்டுக்கல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

இதையடுத்து அவிநாசியில் தனிமைபடுத்தப்பட்டு இருந்த தம்பதியர் திருப்பூர் தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொண்டதில், இருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தம்பதியர் கரோனா சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உடன் அவர்களது 8 மாதக் குழந்தையும் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த அவிநாசி நாராசா வீதியைச் சேர்ந்த ஒருவரும், அவிநாசி காவலர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் மனைவியும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
 

Leave a Reply