ஆசனூர் வனத்தில் வனஉயிரின குற்றத்தடுப்பு துறையினர் ஆய்வு

18 views
1 min read
forest

ஆசனூர் வனத்தை வனஉயிரின குற்றத்தடுப்பு துறையினர் இன்று நேரில் ஆய்வு செய்தனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை மீறியும் தேசிய புலிகள் காப்பகத்தின் நெறிமுறை பின்பற்றாமல் ஆசனுர் வனக்கோட்டத்தில் நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டதாக வந்த புகார் எழுந்தது. இதையடுத்து தமிழக வனஉயிரின குற்றத்தடுப்பு துறையினர் புகார் கூறப்பட்ட ஆசனூர் வனத்தில் இன்று நேரில் ஆய்வு செய்தனர்.

கள ஆய்வில் அனுமதியின்றி மரங்கள் வெட்டப்பட்டதை உறுதி செய்தையடுத்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். சத்தியமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினரும் புலிகள் காப்பகத்தின் மேலாண்மை குழு உறுப்பினருமான எஸ்.ஈஸ்வரன் சம்பந்தப்பட்ட இடங்களில் ஆராய்ந்து மரங்கள் வெட்டப்பட்டதை உறுதி செய்தார். 

இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட வனஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு எம்எல்ஏ  பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளார்.

TAGS
Asanur Forest

Leave a Reply