ஆண்டிபட்டியில் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

16 views
1 min read
108_ambu

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பாண்டியராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் மாரிச்சாமி முன்னிலை வகித்தார். 

ஆர்ப்பாட்டத்தின்போது , 108 நிர்வாகத்தை நிர்வகித்து வரும் தனியார் நிறுவனத்தின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும், கரூர் மாவட்டத்தில் பணியாற்றிய 6 பணியாளர்களை காரணமின்றி இடை நீக்கம் செய்ததை கண்டித்தும், அவர்களுக்கு மீண்டும் பணி வழங்க  வேண்டும் எனவும், சிறப்பு விடுப்பிற்கு வழங்கப்பட்டு வந்த தொகையை நிறுத்தி வைத்துள்ளது கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

Leave a Reply