ஆண்டிபட்டி அருகே மனைவியை கத்தியால் குத்திய கணவன் கிணற்றுக்குள் தஞ்சம்

15 views
1 min read
காவலர்கள் விசாரணைக்கு பயந்து விவசாய கிணற்றில் பதுங்கிக் கொண்ட சடையாண்டியை மீட்ட தீயணைப்பு துறையினர்.

காவலர்கள் விசாரணைக்கு பயந்து விவசாய கிணற்றில் பதுங்கிக் கொண்ட சடையாண்டியை மீட்ட தீயணைப்பு துறையினர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மறவபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சடையாண்டி (27). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஈஸ்வரி (22)  இவர்களுக்கு இரண்டரை வயதில் ஒரு மகன் உள்ளார். கடந்த சில வருடங்களாக கணவன் மனைவி இடையே பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் செவ்வாய்கிழமை இரவு இருவருக்கும் இடையே மீண்டும் பிரச்னை எழுந்துள்ளது அப்போது ஈஸ்வரியை சடையாண்டி கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த ஈஸ்வரியை அக்கம் பக்கத்தினர் மீட்டு தேனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்தச் சம்பவத்தில் காவலர்கள் விசாரணைக்கு பயந்து சடையாண்டி அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் இருந்த 50 அடி ஆழ கிணற்றில் இறங்கி பதுங்கிக் கொண்டார். 

இதுகுறித்து தகவல் அறிந்த ஆண்டிபட்டி காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணைப்பு துறையினர் உதவியுடன் சடையாண்டியை கிணற்றில் இருந்து மீட்டனர். மேலும் இதுகுறித்து காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply