ஆண் குழந்தைக்குத் தாயானார் பிக் பாஸ் ரம்யா

15 views
1 min read
ramya1

 

பாடகியும் பிக் பாஸ் சீசன் 2-வின் போட்டியாளருமான ரம்யா என்எஸ்கே, ஆண் குழந்தைக்குத் தாயாகியுள்ளார்.

தமிழ், தெலுங்கும் மலையாளம் ஆகிய மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருப்பவர் ரம்யா. மறைந்த நகைச்சுவை நடிகர் என்.எஸ். கிருஷ்ணனின் பேத்தியான ரம்யா, 2018-ல் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கவனம் பெற்றார்.

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் நடிகர் சத்யாவைத் திருமணம் செய்துகொண்டார் ரம்யா என்எஸ்கே. இத்திருமணத்தில் பிக் பாஸ் போட்டியாளர்களான மும்தாஜ், ஜனனி மற்றும் நடிகை சனம் ஷெட்டி ஆகியோர் கலந்துகொண்டார்கள். ரம்யாவின் கணவர் சத்யா, மன்னர் வகையறா படத்திலும் நீலக்குயில் என்கிற தொலைக்காட்சித் தொடரிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதைச் சமூகவலைத்தளங்களில் ரம்யா அறிவித்துள்ளார்.

TAGS
Ramya NSK

Leave a Reply