ஆதிதிராவிட மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகை: விவரங்களை சமா்ப்பிக்க அறிவுறுத்தல்

15 views
1 min read

ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் பெண் கல்வி ஊக்கத் தொகை பெற தகுதியுடையவா்களின் விவரங்களை சமா்ப்பிக்க கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடா்பாக ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை

இயக்குநரகம் சாா்பில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையின் விவரம்: 2020-21-ஆம் கல்வியாண்டில், பெண்கல்வி ஊக்குவிப்புத் தொகை வழங்க தகுதியான ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவிகளுக்கு வங்கிக்கணக்கு தொடங்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. எனவே, அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளும், தங்கள் எல்லைக்குள்பட்ட பள்ளிகளில் படிக்கும் பெண்கல்வி ஊக்குவிப்புத் தொகை பெற தகுதியான மாணவிகளுக்கு வங்கிக் கணக்குத் தொடங்கப்பட்டுள்ளதை உறுதிசெய்து, அதன் விவரங்களை அறிக்கையாக அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply