ஆந்திரத்தில் ஒரே நாளில் 1,062 பேருக்கு கரோனா; 12 பேர் பலி

15 views
1 min read
Andhra reports 1,062 new COVID-19 cases, 12 fatalities in last 24 hours

ஆந்திரத்தில் ஒரே நாளில் 1,062 பேருக்கு கரோனா; 12 பேர் பலி

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,063 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்த 12 பேர் பலியாகியுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதில் அதிகபட்ச நோயாளிகள் சித்தூர், குண்டூர், கிழக்கு கோதாவரி ஆகிய மாவட்டங்களில் அதிகமாக இருந்தது.

இதையடுத்து, ஆந்திர மாநிலத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 22,259 ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 10,894 ஆக உயர்ந்துள்ளது. 11 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 264 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
 

TAGS
coronavirus

Leave a Reply