ஆந்திரத்தில் கரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை எட்டியது; இன்று 15 பேர் பலி

17 views
1 min read
COVID-19 tally crosses 25,000 in Andhra with 1,608 fresh cases, 15 more die

ஆந்திரத்தில் கரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை எட்டியது; இன்று 15 பேர் பலி

விஜயவாடா: ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் உச்சபட்சமாக 1608 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மொத்த பாதிப்பு 25 ஆயிரத்தை எட்டிவிட்டது.

இன்று காலை 9 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 21 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 1,608 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. கரோனா பாதித்த 15 பேர் பலியாகியுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு நாள்தோறும் ஆயிரத்தைக் கடந்து வந்த நிலையில், இன்று உச்சபட்சமாக 1,600-ஐ எட்டிவிட்டது.

கரோனா தொற்று பாதிப்பு குறித்து மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில், இன்று ஆந்திர மாநிலத்தில் 1600 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆந்திர மாநிலத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 25,422 ஆக உயர்ந்துள்ளது. 

கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 11,936 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 981 பேர் குணமடைந்த நிலையில், ஆந்திரத்தில்  மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதுவரை 292 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
 

TAGS
coronavirus

Leave a Reply