ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்படாது: அமைச்சர் செங்கோட்டையன்

25 views
1 min read
senkottaian

சென்னை: தமிழகத்தில் ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்படாது; தொலைக்காட்சிகள் மூலமாகத்தான் பாடத்திட்டம் கற்பிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்படாது; தொலைக்காட்சிகல் மூலமாகத்தான் பாடத்திட்டம் கற்பிக்கப்படும்.  அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புக்காக 3 தொலைக்காட்சிகள் தயார்நிலையில் உள்ளன என்று கூறினார்.  

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்பு நடத்தப்போவதாக தகவல் வெளியான நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.
 

Leave a Reply