ஆம்பூரில் கரோனாவுக்கு பள்ளிவாசல் இமாம் பலி

20 views
1 min read
tpr

ஆம்பூரில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பள்ளிவாசல் இமாம் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். 

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சந்தப்பேட்டை மசூதி பகுதியைச் சேர்ந்தவர் பள்ளிவாசல் இமாம் (போதகர்) வயது(39) என்பவருக்கு பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு கடந்த சில நாள்களாக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

இந்தநிலையில் இரு நாள்களுக்கு முன்பு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார். திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் முதல் உயிரிழப்பு இது தான்.

நகராட்சி ஆணையாளர் த. சௌந்தரராஜன், வட்டாட்சியர் சி. பத்மநாபன், காவல்துறை துணை கண்காணிப்பாளர் சச்சிதானந்தம், காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் முன்னிலையில், காவல்துறையினர் பாதுகாப்புடன் பெரிய மசூதி அடக்கஸ்தலத்தில் சடலம்  அடக்கம் செய்யப்பட்டது.

TAGS
ambur Corona Death

Leave a Reply