ஆம்பூர் அருகே மரத்தின் மீது வேன் மோதி விபத்து: 10 பேர் படுகாயம்

19 views
1 min read
acci

ஆம்பூர் அருகே மரத்தின் மீது வேன் மோதியதில் 10 பேர் படுகாயமடைந்தனர். 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த உமராபாத் அருகே தனியார் ஷூ கம்பெனி வேன் தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு சனிக்கிழமை சென்றது.  அப்போது சாலையோரம் இருந்த மரத்தின் மீது  வேன் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

உமர்ஆபாத் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

TAGS
Ambur van accident

Leave a Reply