ஆம்பூர் பகுதியில் இரவு முழுவதும் மழை: நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு

18 views
1 min read
ambur

ஆம்பூர் நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு

 

ஆம்பூர் பகுதியில் வியாழக்கிழமை இரவு முழுவதும் இடைவிடாமல் பெய்த கன மழை காரணமாக நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் வியாழக்கிழமை இரவு சுமார் 7.30 மணிக்கு மழை பெய்யத் துவங்கியது. இடைவிடாமல் கனமழை பெய்தது.  விட்டு விட்டு இரவு முழுவதும் பெய்த கனமழை வெள்ளிக்கிழமை அதிகாலை வரை தொடர்ந்தது.  

ஆம்பூரில் 47.6 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது. வடபுதுப்பட்டு  கிராமத்தில் ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைந்துள்ள பகுதியில் 55.4 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது. 

ஆம்பூர் பகுதியில் பெய்த கன மழை காரணமாக ஆம்பூர் அருகே கிராமங்களில் கானாறு, நீர்வீழ்ச்சிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  அதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

TAGS
rain

Leave a Reply