ஆம்பூர்: வாகனத்தை போலீஸார் பறிமுதல் செய்ததால் வாலிபர் தீக்குளிப்பு

17 views
1 min read
youth attempts self immolation in Ambur

ஆம்பூரில் போலீஸார் வாகனத்தை பறிமுதல் செய்ததால் தீக்குளித்த வாலிபர்

ஆம்பூரில் இரு சக்கர வாகனத்தை போலீஸார் பறிமுதல் செய்ததால் வாலிபர் தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த முகிலன்(27). இவர் தனியார் காலணி தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.

இன்று தமிழக முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், முகிலன் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் மருந்து வாங்க பேருந்து நிலையம் நோக்கி வந்த்துள்ளார். அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த சந்திரசேகர் உட்பட 2 காவலர்கள் முகிலன் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து மனம் உடைந்த முகிலன், வீட்டிற்குச் சென்று மண்ணெண்ணையை எடுத்துக்கொண்டு  அங்குள்ள பள்ளி அருகில் வைத்து தீ வைத்துக் கொண்டார்.

இவருடைய அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவருக்கு அதிகமாக தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதால் முதலுதவி சிகிச்சை செய்து பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் காமினி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆகியோர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் குறித்து நகர போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தீக்குளித்த முகிலனுக்கு லீலாவதி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இதுதொடர்பாக வாணியம்பாடி கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி, தாசில்தார் பத்மநாபன், மாவட்ட எஸ்.பி. விஜயகுமார், ஆம்பூர் டிஎஸ்பி சச்சிதானந்தம் உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.

TAGS
ambur

Leave a Reply