ஆலங்குடி அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி பலி

19 views
1 min read
former

 

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி மின்சாரம் தாக்கி புதன்கிழமை காலை உயிரிழந்தார்.

ஆலங்குடி அருகேயுள்ள மழையூரைச் சேர்ந்தவர் கருப்பையா(47). விவசாயியான இவர், புதன்கிழமை காலை, அவர் வளர்த்துவரும் நாயோடு, அப்பகுதியில் உள்ள வயலுக்குச் சென்றுள்ளார். அப்போது, பாதையில் மின்கம்பி அறுந்து கிடந்துள்ளது. இதை பார்க்காமல்  மின்கம்பியை மிதித்த கருப்பையா மின்சாரம் தாக்கி அந்த இடத்திலேயே  உயிரிழந்தார். அவரது நாயும் மின்சாரம் பாய்ந்து அந்த இடத்திலேயே உயிரிழந்தது.

தகவலறிந்து அங்கு சென்ற மழையூர் காவல்துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விவசாயியும், அவரது செல்லப்பிராணியும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

TAGS
farmer

Leave a Reply