இங்கிலாந்து கேப்டனுக்குப் பெண் குழந்தை!

18 views
1 min read
root_child1

 

இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், பெண் குழந்தைக்குத் தந்தையாகியுள்ளார்.

செளதாம்ப்டனில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கடந்த புதன் அன்று தொடங்கியது. மூன்று ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூலை 28 அன்று முடிவடைகிறது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக மூன்று டெஸ்டுகளும் காலி மைதானத்தில் நடைபெறும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. கரோனா அச்சுறுத்தலால் பல்வேறு கிரிக்கெட் தொடர்களும் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் 116 நாள்களுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் ஆட்டத்தைக் காணும் வாய்ப்பு ரசிகர்களுக்குக் கிடைத்துள்ளது.

இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டுக்கு 2-வது குழந்தை பிறந்துள்ளது. இதனால் முதல் டெஸ்டிலிருந்து ஜோ ரூட் விலகியுள்ளார். இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஆல்ரவுண்டர் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஜாஸ் பட்லர் துணை கேப்டனாகச் செயல்படுகிறார்.

இந்நிலையில் இஸபெல்லா என்று பெயரிடப்பட்டுள்ள தனது பெண் குழந்தையின் புகைப்படத்தை சமூகவலைத்தளங்களில் ஜோ ரூட் பகிர்ந்துள்ளார். 

மருத்துவமனையிலிருந்து குடும்பத்தினருடன் வெளியே வந்தவுடன் சுயமாகத் தனிமைப்படுத்திக்கொண்ட பிறகே அணியினருடன் ஜோ ரூட் இணைவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மே.இ. தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசி இரு டெஸ்டுகளில் ஜோ ரூட் விளையாடுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

2-வது டெஸ்ட், மான்செஸ்டரில் ஜூலை 16 அன்று தொடங்கவுள்ளது.

 

 

 

 

View this post on Instagram

 

 

 

 

 

 

 

 

 

 

 

A post shared by Joe Root (@root66) on Jul 8, 2020 at 3:32am PDT

 

TAGS
Joe Root

Leave a Reply