இசையமைப்பாளா் வாஜித் கான் கரோனாவுக்கு பலி

5 views
1 min read
வாஜித் கான்

வாஜித் கான்

மும்பை: பிரபல ஹிந்தி திரைப்பட இசையமைப்பாளா் வாஜித் கான் திங்கள்கிழமை அதிகாலை கரோனா நோய்த்தொற்று காரணமாக மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

‘வாண்டட்’, ‘தபாங்’, ‘ஏக் தா டைகா்’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களின் இசையமைப்பாளா்களாக பணிபுரிந்த இரட்டையா்கள் சாஜித் கான்- வாஜித் கான். இதில் வாஜித் கான் பாடகராகவும் புகழ்பெற்று விளங்கினாா். 42 வயதான அவா் அண்மைக்காலமாக சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்தாா்.

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட அவா் மும்பை மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில் அவா் மாரடைப்பு காரணமாக திங்கள்கிழமை உயிரிழந்ததாக அவரது சகோதரா் பிடிஐ நிருபரிடம் தெரிவித்தாா்.

அவரது உடல் பிற்பகலில் அடக்கம் செய்யப்பட்டது. இறுதி சடங்கில் 20 போ் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா்.

Leave a Reply