இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 28,637 பேருக்கு கரோனா பாதிப்பு

17 views
1 min read
test

கோப்புப்படம்

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 8,49,553ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் புதிதாக 28,637 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. மேலும் கரோனா தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கையும் 22,674-ஆக உயர்ந்துள்ளது.

உலகைத் தொடர்ந்து இந்தியாவிலும் கரோனா வைரஸ் பாதிப்பு வேகம் எடுத்து வருகிறது. எனினும், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ஞாயிற்றுகிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக 28,637 பேருக்கு கரோனா உறுதியானது. 

இதன் மூலமாக தொடா்ந்து 9-ஆவது நாளாக 22,000-க்கும் அதிகமானோா் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கரோனா தொற்றில் இருந்து இதுவரை 5,34,621 போ் குணமடைந்தனா். 2,92,258 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுகிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கரோனாவுக்கு மேலும் 551 போ் உயிரிழந்தனா். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2,46,600 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 10,116 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1,36,985 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. 
 

TAGS
corona update

Leave a Reply