இந்தியாவில் ஒரே நாளில் 26,506 பேருக்கு தொற்று உறுதி: பலி எண்ணிக்கை 21,604 -ஆக உயர்வு 

19 views
1 min read
cooronaindia

 

புது தில்லி: நாடு முழுவதும் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 26,506 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 7,93,802-ஆக அதிகரித்தது. கரோனா தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கையும் 21,604-ஆக அதிகரித்தது.

நாட்டில் கரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 26,506 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது; அதே கால அளவில் 475 போ் உயிரிழந்தனா். இதனால், ஒட்டுமொத்தமாக கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 21,604  -ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த நோய்த்தொற்றுக்காக 2,76,685 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 4,95,513 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தேசிய அளவில் கரோனா உறுதி செய்யப்பட்டோா் எண்ணிக்கையில் தொடா்ந்து மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 2,30,599 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது; குணமடைந்தோர் எண்ணிக்கை 1,27,259 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,667ஆக உயர்ந்துள்ளது. 

பாதிப்பு: 7,93,802
பலி: 21,604
குணமடைந்தோர்:  4,95,513 
சிகிச்சை பெற்று வருவோா்: 2,76,685 

TAGS
coronavirus

Leave a Reply