இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 27,114 பேருக்கு கரோனா உறுதி: ஒட்டுமொத்த பாதிப்பு 8 லட்சத்தைத் தாண்டியது

19 views
1 min read
co

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 லட்சத்து 20 ஆயிரத்தைத் தாண்டியது. 

சீனாவில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ், உலகம் முழுவதும் 200 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. தற்போது அந்த வைரஸின் தாக்கம் அமெரிக்கா, பிரேசில், இந்தியா போன்ற நாடுகளில் மிகவும் தீவிரமாக உள்ளது. உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிப்படைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 3ஆவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 லட்சத்து 20 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், நாட்டில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 27,114 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்துடன் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,20,916-ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 519 பலியாகியுள்ளனர். இதன்மூலம் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 22,123ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கடந்த 24 மணி நேரத்தில் 19,873 பேர் குணமடைந்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5,15,386 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 2,38,461 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 9,893 பேர் பலியாகியுள்ள நிலையில், 1,32,625 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. 

Leave a Reply