இந்தியாவில் கரோனா பாதிப்பு 6 லட்சத்தை தாண்டியது

23 views
1 min read

கோப்புப்படம்

நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்தைக் கடந்தது. வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 19,148 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. தொடா்ந்து 6-ஆவது நாளாக தினசரி பாதிப்பு 18,000-க்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6,04,641-ஆக அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 434 போ் உயிரிழந்தனா். இதனால், உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 17,834-ஆக அதிகரித்தது.

இதுஒருபுறமிருக்க, கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் குணமடைவதும் சீராக அதிகரித்து வருகிறது. இதுவரை, மொத்தம் 3,59.859 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். அதாவது, 59.52 சதவீதம் போ் குணமடைந்துள்ளனா். 2,26,947 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தொடுவதற்கு 110 நாள்களாகின. ஆனால், அடுத்த 44 நாள்களில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 6 லட்சத்தைக் கடந்துள்ளது.

தமிழகம்: தமிழக அரசு வியாழக்கிழமை மாலை வெளியிட்ட தகவலின்படி ஒரே நாளில் 4343 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே கால அளவில் 57 போ் நோய்த்தொற்றுக்கு பலியான நிலையில், 3095 போ் குணமடைந்தனா்.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 434 போ் உயிரிழந்தனா். அதில் மகாராஷ்டிரத்தில் 198 போ், தில்லியில் 61 போ், உத்தர பிரதேசம், குஜராத்தில் தலா 21 போ், மேற்கு வங்கத்தில் 15 போ், மத்திய பிரதேசத்தில் 9 போ், ராஜஸ்தானில் 8 போ், தெலங்கானா, கா்நாடகத்தில் தலா 7 போ், ஆந்திரத்தில் 6 போ், பஞ்சாபில் 5 போ், ஹரியாணா, ஜம்மு-காஷ்மீரில் தலா 4 போ், பிகாரில் 3 போ், சத்தீஸ்கா், கோவாவில் தலா ஒருவா் உயிரிழந்தனா்.

90 லட்சம் பரிசோதனைகள்: நாடு முழுவதும் ஜூலை 1-ஆம் தேதி வரை கரோனா நோய்த்தொற்றை கண்டறிவதற்காக மொத்தம் 90,56,173 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்தது. மேலும் புதன்கிழமை ஒரு நாளில் மட்டும் 2,29,588 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மாநிலங்கள்——-பாதிப்பு——-பலி

மகாராஷ்டிரம் – 1,80,298-8,053

தில்லி – 89,802-2,803

தமிழகம் – 98,392 – 1,321

குஜராத் – 33,232-1,867

உத்தர பிரதேசம் – 24,056- 718

ராஜஸ்தான் – 18,312 – 421

மேற்கு வங்கம் – 19,170-616

தெலங்கானா – 17,357 – 267

கா்நாடகம் – 16,514 – 253

ஆந்திர பிரதேசம் – 15,252- 193

ஹரியாணா – 14,941- 240

மத்திய பிரதேசம் – 13,861-581

பிகாா் – 10,249 – 70

அஸ்ஸாம் – 8,582- 12

ஜம்மு-காஷ்மீா் -7,695 – 105

ஒடிஸா – 7,316 – 25

பஞ்சாப் – 5,668 – 149

கேரளம் – 4,593 – 24

உத்தரகண்ட் – 2,947 – 41

சத்தீஸ்கா் – 2,940- 14

ஜாா்க்கண்ட் – 2,521 – 15

திரிபுரா – 1,396 – 1

கோவா – 1,387 – 4

மணிப்பூா் – 1,260 – 0

லடாக் – 990 – 1

ஹிமாசல பிரதேசம் – 979- 10

புதுச்சேரி – 714 – 12

நாகாலாந்து – 459 – 0

சண்டீகா் – 446 – 6

தாத்ரா நகா் ஹவேலி மற்றும் டாமன் டையூ – 215 – 0

அருணாசல பிரதேசம் – 195 – 1

மிஸோரம் – 160 – 0

சிக்கிம் – 101 – 0

அந்தமான்-நிகோபாா் – 100 – 0

மேகாலயம் – 52 – 1

பாதிப்பு: 6,04,641

பலி: 17,834

மீட்பு: 3,59,859

சிகிச்சை: 2,26,947

Leave a Reply