இந்தியாவில் தெரியும் வால்நட்சத்திரம்: வெறும் கண்களாலேயே பார்க்கலாம்

12 views
1 min read
comet

இந்தியா முழுவதும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என இரண்டு நாள்களுக்கு வானத்தில் வால்நட்சத்திரம் தெரியும் என்றும், அதனை மக்கள் வெறும் கண்களாலேயே பார்க்கலாம் என்றும் நாசா அறிவித்துள்ளது.

கரோனா பாதிப்பினால் பொதுமக்கள் பலரும் வீட்டுக்குள் முடங்கியிருக்கும் நிலையில், இந்தியாவில் இன்றும் நாளையும் வானத்தில் வால் நட்சத்திரம் தெரியும் என்று சர்வதேச அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா அறிவித்துள்ளது.

இந்த வால்நட்சத்திரத்துக்கு ‘நியோவைஸ்’ மற்றும் ‘கோமெட் 2020’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த வால் நட்சத்திரமானது முதல் முறையாக கடந்த 8-ம் தேதி பிரான்ஸின் மாண்ட்லுகன் பகுதியில் வானில் இருந்து சூரியன் மறைந்த பிறகு தெரிந்தது. இந்தப் புகைப்படத்தையும் நாசா வெளியிட்டுள்ளது.

இந்த நியோவைஸ் வரும் 22-ம் தேதி பூமிக்கு அருகில் வரும் என்றும், கடந்த மார்ச் மாதம் இந்த வால் நட்சத்திரமான நாசாவின் தொலைநோக்கி மூலமாகக் கண்டறியப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply