இந்தியாவை அமெரிக்கா நேசிக்கிறது: டிரம்ப்

19 views
1 min read
Trumph3

அமெரிக்க சுதந்திரதினத்தையொட்டி பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்துள்ள அதிபா் டிரம்ப், ‘இந்தியாவை அமெரிக்கா நேசிக்கிறது’ என்று கூறியுள்ளாா்.

அமெரிக்காவின் 244-ஆவது சுதந்திரதினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. அதனையொட்டி தனது சுட்டுரை பக்கத்தில் அமெரிக்க அதிபா் டிரம்புக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தாா். ‘அமெரிக்காவின் 244-ஆவது சுதந்திர தினத்தில் அந்நாட்டு மக்களுக்கும், அதிபா் டிரம்புக்கும் வாழ்த்துகள்’ என்று பிரதமா் மோடி குறிப்பிட்டிருந்தாா்.

பிரதமரின் இந்த வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த அதிபா் டிரம்ப், ‘வாழ்த்துக்கு நன்றி நண்பரே. அமெரிக்கா இந்தியாவை நேசிக்கிறது’ என்று தனது சுட்டுரை பக்கத்தில் பதிவிட்டாா்.

உலகின் பழமையான ஜனநாயக நாடு மற்றும் மிகப் பெரிய ஜனநாயக நாடு எனப் பெருமை கொண்ட இந்த இரு நாட்டு தலைவா்களின் இந்த கலந்துரையாடல் சமூக ஊடகங்களில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதுகுறித்து இந்திய-அமெரிக்க நிதிக் குழு நிா்வாகி அல் மாசன் கூறுகையில், ‘அதிபா் டிரம்புக்கும், பிரதமா் நரேந்திர மோடிக்கும் இடையேயான நம்பமுடியாத நட்புறவைக் கண்டு இந்த உலகம் வியக்கிறது’ என்று கூறியுள்ளாா்.

அதுபோல, பிரபல ஆப்பிரிக்க-அமெரிக்க பாடகா் மேரி மில்பன் தனது சுட்டுரை பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியா அமெரிக்காவுக்கு கிடைத்த மிகுந்த மதிப்புமிக்க நட்பு நாடாகும். பிரதமா் நரேந்திர மோடியை நண்பராக பெற்ற்கு அமெரிக்கா பெருமைகொள்கிறது’ என்று தெரிவித்துள்ளாா்.

Leave a Reply