இந்திய சினிமா உள்ளவரை பாகுபலி கொண்டாடப்படும்: படக்குழு நெகிழ்ச்சி

16 views
1 min read
baahubali

 

பாகுலி படத்தின் முதல் பாகம் வெளிவந்து 5 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதைக் கொண்டாடும் விதமாக பாகுபலி பற்றிய பதிவுகளைப் படக்குழுவினரும் ரசிகர்களும் சமூகவலைத்தளங்களில் எழுதி வருகிறார்கள்.

எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான படம் – பாகுபலி. பாகுபலி படத்தின் பெரிய வெற்றியால் அதன் இரண்டாம் பாகம் வெளிவந்தது. அது முதல் பாகத்தை விடவும் பெரிய வெற்றி பெற்று வசூலில் சாதனை படைத்தது. 

பாகுபலி படம் வெளிவந்து 5 ஆண்டுகள் ஆனதையொட்டி விடியோ ஒன்றை பிரபாஸ் வெளியிட்டுள்ளார். 

 

 

 

 

View this post on Instagram

 

 

 

 

 

 

 

 

 

 

 

A post shared by Prabhas (@actorprabhas) on Jul 9, 2020 at 12:33pm PDT

பாகுபலி குழு ட்விட்டரில் தெரிவித்ததாவது:

படம் வெளிவந்து 5 வருடங்கள் ஆன பிறகும் பாகுபலி படத்தை மக்கள் கொண்டாடுகிறார்கள். #5YearsForBaahubaliRoar ஹேஷ்டேக் சமூகவலைத்தளங்களில் டிரெண்டிங் ஆகியுள்ளன.

எங்கள் படத்தை ஒரு பெரிய மைல்கல்லாக மாற்றியதற்கு நன்றி. இந்திய சினிமா உள்ளவரை பாகுபலி கொண்டாடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

TAGS
Baahubali

Leave a Reply