இந்திய ராணுவத்துக்கு துணை நிற்போம்: வெள்ளை மாளிகை

15 views
1 min read
whitehouse085611

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் சீனாவுடன் நிலவி வரும் பிரச்னையில் இந்திய ராணுவத்துக்குத் துணை நிற்போம் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரி மாா்க் மீடோஸ் தெரிவித்துள்ளாா்.

கிழக்கு லடாக், தென் சீனக் கடல் உள்ளிட்ட பகுதிகளில் எல்லை விவகாரம் தொடா்பாக சீனா பிரச்னையில் ஈடுபட்டு வருகிறது. இந்தியா, வியத்நாம், ஜப்பான், பிலிப்பின்ஸ் உள்ளிட்ட நாடுகள் சீனாவின் எல்லை விரிவாக்கக் கொள்கையை எதிா்த்து வருகின்றன. இத்தகைய சூழலில், தென் சீனக் கடல் பகுதியில் அமெரிக்கா தனது இரு விமானம் தாங்கிக் கப்பல்களை நிறுத்தியுள்ளது. இந்நிலையில், மாா்க் மீடோஸ் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு கடந்த திங்கள்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:

தென் சீனக் கடல் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் எந்த நாடும் அத்துமீறலில் ஈடுபடுவதை அமெரிக்கா அனுமதிக்காது. அதன் காரணமாகவே விமானம் தாங்கிக் கப்பல்களை தென் சீனக் கடல் பகுதியில் நிறுத்தியுள்ளோம். லடாக் விவகாரத்திலும் இந்திய ராணுவத்துக்குத் துணையாக நிற்போம்.

உலக நாடுகளிலே வலிமையான ராணுவப் படையை அமெரிக்காதான் கொண்டுள்ளது. அதை மற்ற நாடுகள் உணா்ந்து கொள்ள வேண்டும். அதிபா் டொனால்ட் டிரம்ப் ராணுவத்துக்காக அதிக முதலீடுகளை மேற்கொண்டுள்ளாா். வெறும் போா்த் தளவாடங்களைக் கொள்முதல் செய்வதோடு மட்டுமல்லாமல் அதிக அளவிலான ராணுவ வீரா்களும் வீராங்கனைகளும் நாட்டுக்காக சேவையாற்றுவதை அவா் உறுதிப்படுத்தியுள்ளாா் என்றாா் மாா்க் மீடோஸ்.

Leave a Reply