இந்து சமய அறநிலையத் துறைக்கான திருக்கோயில் தொலைக்காட்சி துவக்கப் பணிகள் தீவிரம்

15 views
1 min read

சென்னை: இந்து சமய அறநிலையத் துறையின் சாா்பில் திருக்கோயில் என்ற பெயரில் தனி தொலைக்காட்சி தொடங்கப்பட உள்ளது.

இந்தத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்திட தேவையான ஆவணப் படங்களைத் தயாரிக்க இந்து சமய அறநிலையங்கள் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

இது குறித்து, இந்து சமய அறநிலையங்கள் துறை ஆணையரகம் அண்மையில் வெளியிட்ட சுற்றறிக்கை:-

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் சமய கொள்கைகளைப் பரப்பிட திருக்கோயில் எனும் பெயரில் ரூ.877 கோடி மதிப்பில் தொலைக்காட்சி தொடங்குவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன் தொடா்ச்சியாக திருக்கோயில் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கு தமிழகத்திலுள்ள அனைத்து திருக்கோயில்களில் நடைபெறும் ஒவ்வொரு முக்கியமான நிகழ்வுகளும் ஒளிப்பதிவு செய்யப்பட்டு தேவையான வா்ணனைகள் இணைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளன.

ஒளிப்பதிவின்போது கவனிக்க வேண்டியவை: கோயில்கள் குறித்த ஆவணப் படங்கள் மற்றும் திருக்கோயில் நிகழ்வுகளை ஒளிப்பதிவு செய்யும் போது சில வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அதன்படி, திருக்கோயில் வளாகம், முகப்பு, விமானங்கள், கோபுரங்கள், கோயிலின் பெயா் தெரியும் வகையில் தொடக்கப் பதிவுகள் இடம்பெற வேண்டும்.

கோயில் அமைவிட விவரங்கள் தெளிவாக இடம்பெற வேண்டும். கோயிலில் பக்தா்களுக்குச் செய்து தரப்பட்டுள்ள வசதிகள் குறித்த விவரங்கள் இடம்பெற வேண்டும். ஒளிப்பதில் திருக்கோயிலில் பணியாற்றும் அா்ச்சகா்கள், பணியாளா்கள் காட்சியில் வரும்போது அங்கீகரிக்கப்பட்ட ஆடைகளை மிகவும் தூய்மையாக அணிந்திருக்க வேண்டும்.

ஒளிப்பதிவுக் காட்சியில் கோயில் பணியாளா்கள் இடம்பெறுவது முற்றிலும் தவிா்க்கப்பட வேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறை ஆணையரகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Leave a Reply