இன்னமும் சென்னை கரோனா அபாயப் பகுதியாக உள்ளது: மத்திய சுகாதார அமைச்சர்

20 views
1 min read
Chennai still a corona hotspot: Union Health Minister

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன்

புது தில்லி: தமிழகத்தில் சென்னை இன்னமும் கரோனா அபாயப் பகுதியாக உள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வரதன் தெரிவித்துள்ளார்.

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் காணொலி காட்சி வாயிலாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இன்று ஆலோசனை நடத்தினார்.

அதன்பிறகு ஹர்ஷ்வர்தன் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் கரோனா மொத்த பாதிப்பு 1,26,581 ஆக உள்ளது. இதில் தற்போது 46,655 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். 1,765 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்னமும் சென்னை கரோனா அபாயப் பகுதியாகவே உள்ளது. எனினும் நிலைமை சீரடைந்து வருகிறது. தமிழகத்தில் கரோனா பாதிப்புக்கு பலியாவோர் விகிதம் 1.39% ஆக உள்ளது என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 

TAGS
coronavirus

Leave a Reply