இன்று முழு பொதுமுடக்கத்தால் ஈரோடு வெறிச்சோடியது 

14 views
1 min read
er3

முழு பொதுமுடக்கம் காரணமாக ஈரோடு முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டடது.

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் இந்தியாவில் ஊடுருவி தற்போது தமிழகத்தில் இதன் தாக்கம் எதிரொலித்து வருகிறது. தமிழகம் முழுவதும் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே இதை கட்டுப்படுத்தும் வகையில் பொது முடக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக பல தளர்வுகளுடன் பொது முடக்கம் நீடிக்கப்பட்டு வந்தது. எனினும் வைரஸ் தாக்கம் குறைந்தபாடில்லை. இதையடுத்து வரும் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டது. 

இந்த மாதத்தில் வரும் 4 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் முழு பொதுமுடக்கம் எந்தவித தளர்வுமின்றி முழுமையாக கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று நள்ளிரவு முதல் முழு பொதுமுடக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜவுளிக்கடைகள். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கவில்லை. இதே போல் ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட் சின்ன மார்க்கெட் உழவர் சந்தை போன்றவை மூடப்பட்டு இருந்தது. ஹோட்டல்கள் இறைச்சிக் கடைகள், மளிகை கடைகள், டாஸ்மாக் உட்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. 

ஆனால் அத்தியாவசிய பொருட்களான பால், மருந்தகம் கடைகள் வழக்கம் போல் செயல்பட்டன. மாவட்டம் முழுவதும் அம்மா உணவகம் வழக்கம் போல் செயல்ப்பட்டன. பொது முடக்க விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்திருந்தார். இன்று அதிகாலை முதலே முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. ஈரோடு மாநகர் பகுதியில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பன்னீர்செல்வம் பார்க் பகுதி சூரம்பட்டி நால்ரோடு காளைமாடு சிலை ஈரோடு பஸ் நிலையம் சுவஸ்திக் கார்னர், வீரப்பன்சத்திரம் ஆர் கே வி ரோடு கடை வீதிகள் ஈஸ்வரன் கோயில் வீதி போன்றவற்றில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. 

பொது முடக்கம் போது தேவையில்லாமல் வெளியே சுற்றுப் அவர்களை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் 1200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆங்காங்கே முக்கியமான பகுதிகளில் தடுப்புகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். தேவையில்லாமல் சுற்றிய சிலரின் வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். குறிப்பா மாவட்ட எல்லைப் பகுதியான கருங்கல்பாளையம் சோதனைச் சாவடி, பண்ணாரி சோதனைச்சாவடி, தாளவாடி சோதனைச் சாவடி, நொய்யல் ஆற்று சோதனைச் சாவடி, அம்மாபேட்டை பவானி போன்ற சோதனை சாவடிகளில் காவல்துறையினர் விடிய விடிய தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

 அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள் மட்டுமே உள்ளே தீவிர சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர். பிற வாகனங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன. இதைப்போல் கோபி பவானி பெருந்துறை அந்தியூர் சத்தியமங்கலம் மொடக்குறிச்சி கொடுமுடி போன்ற பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி டி.வி.யை பார்த்து பொழுதை கழித்தனர். தடை உத்தரவு மீறி யாராவது கடைகளைத் திறந்துவைத்து உள்ளார்களா என்பதை கண்காணிக்க மாநகராட்சி சார்பில் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஒவ்வொரு பகுதியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
 

TAGS
Erode

Leave a Reply