இன்று வரை முறியடிக்க முடியாத கேப்டன் தோனியின் சாதனைகள்!

21 views
1 min read
dhoni_ashwin1

 

2017 ஜனவரி 4 அன்று இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலகினார். 2014-ல் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார் தோனி. 2007 முதல் இந்திய அணியின் கேப்டனாக இருந்த தோனியின் இந்த திடீர் முடிவு ரசிகர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.

ஒரு கேப்டனாக இன்றைக்கும் தோனி வசம் உள்ள சாதனைகள்

* 199 ஒருநாள் போட்டிகளிலும் (110 வெற்றிகள், 74 தோல்விகள்) 72 டி20 போட்டிகளிலும் (41 வெற்றிகள், 28 தோல்விகள்) தோனி கேப்டனாக இருந்துள்ளார். அதேபோல 60 டெஸ்டுகளிலும் (27 வெற்றிகள், 18 தோல்விகள்).

* டி20 உலகக் கோப்பை, ஒருநாள் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை என மூன்று ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன், தோனி மட்டுமே.

* ஒரு கேப்டனாக அதிக டி20 ஆட்டங்களில் (41) வென்றவர் – தோனி. இன்றுவரை அந்தச் சாதனையை யாராலும் முறியடிக்க முடியவில்லை. அடுத்த இடத்தில் 39 வெற்றிகளுடன் உள்ளவர் – ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த அஸ்கார் ஆஃப்கன்.

* ஒருநாள் ஆட்டங்கள் இன்றுவரை அதிக வெற்றிகள் கண்ட கேப்டன்களில் தோனிக்கு 2-ம் இடம். பாண்டிங் 165 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளார். தோனிக்கு 110 வெற்றிகள். இந்திய அளவில் அதிக ஒருநாள் ஆட்டங்களில் வெற்றி அடைந்தவர், தோனி.

* அதிக டி20 ஆட்டங்களுக்கு கேப்டனாக இருந்தவர் – தோனி. 72 ஆட்டங்கள். 2-ம் இடத்தில் அயர்லாந்தின் போர்டர்ஃபீல்ட் – 56 ஆட்டங்கள். 

* 199 ஒருநாள் ஆட்டங்களில் இந்திய அணியின்  கேப்டனாக இருந்துள்ளார் தோனி. இந்திய அளவில் முதல் இடம், உலகளவில் தோனிக்கு 3-ம் இடம். 

* ஒருநாள் ஆட்டங்களின் வெற்றி விகிதத்தில் சிறந்த இந்திய கேப்டனாக உள்ளவர் கோலி. 89 ஆட்டங்களில் 62 வெற்றிகள், 24 தோல்விகளுடன் 2.583 விகிதம் கொண்டுள்ளார். அடுத்த இடத்தில் தோனி – 1.486.

TAGS
MS Dhoni’s Birthday

Leave a Reply