இம்ப்ரோ சித்த மருத்துவப் பொடியை பரிசோதிக்க மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

16 views
1 min read
examine impro sidha powder: HC branch

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

மதுரை: இம்ப்ரோ சித்த மருத்துவப் பொடியை பரிசோதிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மருத்துவப் பொடியை கரோனா பாதித்தவர்களுக்கு பயன்படுத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சித்த மருத்துவத்தின்படி தயாரிக்கப்பட்டுள்ள இம்ப்ரோ (IMPRO) மருத்துவப் பொடியை கரோனாவுக்கு பயன்படுத்தி, வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்குவது குறித்தும் மருந்துகளை ஆய்வு செய்வது குறித்தும் அரசிதழில் வெளியிட்டு சாதாரண மனிதர்களுக்கும் இதன் பயன் சென்றடையும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சித்த மருத்துவர் சுப்ரமணியம் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.
 

TAGS
coronavirus

Leave a Reply