இலவச எரிவாயு உருளை வழங்கும் திட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு

17 views
1 min read
prakash_javadekar

புது தில்லி: மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு உருளை வழங்கும் திட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று புது தில்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறினார்.

பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது, பிரதமரின் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்துக்கு இலவசமாக 5 கிலோ அரிசி அல்லது கோதுமை மற்றும் பருப்பு என 81 கோடி மக்களுக்கு நவம்பர் மாதம் வரை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு உருளை வழங்கும் திட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ், ஊழியர்களும் நிறுவனங்களும் செலுத்த வேண்டிய 24% தொகையை மத்திய அரசே செலுத்தும் திட்டமும் நீட்டிக்கப்பட்டிருப்பதாகவும் அறிவித்தார்.
 

TAGS
coronavirus

Leave a Reply