இளைஞர்களிடம் நடைப்பயிற்சி, சைக்கிள் பயிற்சி ஆர்வத்தை ஏற்படுத்திய கரோனா பொது முடக்கம்

20 views
1 min read
சைக்கிள் பயிற்சியில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள்

சைக்கிள் பயிற்சியில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள்

ராசிபுரம்: நாடு முழுவதும் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக நடைமுறையிலுள்ள கரோனா கால பொது முடக்கம் இளைஞர்களிடமும், மாணவர்களிடமும் நடைப்பயிற்சி, சைக்கிள் பயிற்சி, ஓட்டப்பயிற்சி உள்ளிட்டவற்றில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் இளைஞர்கள், மாணவர்கள் பலர் தங்களது உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். பொது முடக்கத்தால சாலையில் வாகனங்களின் போக்குவரத்து மிக குறைந்த அளவே உள்ள நிலையில் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் அதிகமானோர் நடைப்பயிற்சி ஓட்டப் பயிற்சி போன்றவற்றை மேற்கொள்வது அதிகரித்துள்ளது.

கரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த சில மாதங்களாக பலர் வெளியே செல்ல முடியாத நிலையில் வீட்டில் முடங்கி கிடந்தனர். வேலைக்கு செல்லும் இளைஞர்களும் வீட்டிலிருந்தே தங்களது பணியை செய்ய வேண்டிய நிலை இருந்தது. இதேபோல் பள்ளி கல்லூரிகளும் முற்றிலும் மூடப்பட்ட நிலையில் மாணவர்களும் வீட்டிலேயே இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. 

இந்நிலையில் இந்த பொது முடக்கத்தை இளைஞர்களும் மாணவர்களும் பல்வேறு விளையாட்டுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். குறிப்பாக வீடுகளில் பாரம்பரிய விளையாட்டுகளில் ஈடுபட்டதை காணமுடிந்தது. மேலும் ராசிபுரம் பகுதியில் இளைஞர்கள், மாணவர்கள் பலர் சைக்கிளிங் கிளப், வாக்கர்ஸ் கிளப், ரீடிங் கிளப் என பல்வேறு ஒருங்கிணைப்புகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிகாலை வேளைகளில் சாலைகளில் நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி, சைக்கிள் பயிற்சி போன்றவற்றில் அதிகமானோர் ஈடுபட்டதை காணமுடிந்தது. பள்ளி மாணவர் குடியிருப்பு பகுதியில் இருப்போர் ஒன்றுகூடி 10 கிலோ மீட்டர் முதல் 30 கிலோமீட்டர் வரை நாளொன்றுக்கு நடைப்பயிற்சி, ஓட்டப் பயிற்சி, சைக்கிள் பயிற்சி போன்றவற்றில் தங்களது கவனத்தை திருப்பியுள்ளது காணமுடிந்தது. உடல் நலனுக்கு ஏற்ற இந்த பயிற்சியை இளைஞர்களும் மாணவர்களும் மேற்கொண்டுள்ளது பெற்றோர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் காரணமாக சைக்கிள் வாங்கும் ஆர்வம் இளைஞர்களிடம் அதிகரித்துள்ளது.

Leave a Reply