இளையான்குடி அருகே வேன் கவிழந்து 12 பெண் தொழிலாளர்கள் காயம்

16 views
1 min read
thayamangalam

 

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சனிக்கிழமை வேன் கவிழந்து 12 பெண் தொழிலாளர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

இளையான்குடி வட்டம் தாயமங்கலம் கிராமத்திலிருந்து அருகேயுள்ள காயாஓடை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு பெண் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வேன் சென்று கொண்டிருந்துது.

தாயமங்கலம் விலக்கு பகுதியில் சென்றபோது வேன் எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்த பள்ளத்துக்குள் இறங்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து சம்பவத்தில் வேனிலிருந்த 12 பெண் தொழிலாளர்கள் காயமடைந்தனர். அருகேயிருந்தவர்கள் ஓடிவந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு இளையான்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். 

இளையான்குடி போலீசார் விபத்து சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

TAGS
accident

Leave a Reply