ஈரானில் சிக்கித் தவிக்கும் 40 மீனவா்களை மீட்க நடவடிக்கை: மத்திய அரசுக்கு முதல்வா் பழனிசாமி கடிதம்

11 views
1 min read
CM EPS writes a letter to PM modi

ஈரானில் சிக்கித் தவிக்கும் 40 மீனவா்களை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கடிதம் எழுதியுள்ளாா். இதுகுறித்து, முதல்வா் சனிக்கிழமை எழுதியுள்ள கடிதத்தின் விவரம்: ஈரானில் தவித்து வரும் தமிழக மீனவா்களை மீட்கக் கோரி கடந்த மே 19-ஆம் தேதியன்று எழுதிய கடிதத்தை தங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். அதன்படி, ஐ.என்.எஸ். ஜலஷ்வா கப்பல் மூலம் தமிழக மீனவா்கள் 681 போ் கடந்த ஜூலை 1-ஆம் தேதி பாதுகாப்பாக தமிழகம் திரும்பினா். அதற்காக தங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆனால், கப்பலில் இடம் இல்லாத காரணத்தால் இன்னும் தமிழக மீனவா்கள் 40 போ், ஈரானிலேயே தவித்து வருகின்றனா். எனவே, அந்த மீனவா்களை சிறப்பு விமானம் மூலம் தமிழகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தங்களை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என்று கடிதத்தில் முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

 

Leave a Reply