ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு

9 views
1 min read
erd

ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோயில்

ஆருத்ர கபாலீஸ்வரர் கோயிலில் நடந்த, ஆடி மாத பிரதோஷ விழாவில் நந்தீஸ்வரர் பெருமானுக்கு பல்வேறு திரவியங்களில் அபிேஷகம் நடந்தது.

ஆடி மாத பிரதோஷ விழா ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோயில், டி.வி.எஸ்., விதி மகிமாலீஸ்வரர் கோயில், காவிரிக்கரை சோழீஸ்வரர் கோயில், உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள சிவாலயங்களில் நேற்று மாலை சிறப்பாக நடந்தது.

கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோயிலில் மூலவர் சன்னதியின் எதிரில் உள்ள நந்தீஸ்வர பெருமானுக்கு கங்கை நீர், பால், தயிர், பன்னீர், இளநீர், தேன், சந்தனம் உள்ளிட்ட, 16 விதமான திரவியங்களில் அபிேஷகம் நடந்துது. 

அதைத்தொடர்ந்து, வஸ்திரம் சாற்றுதல், அலங்காரம் மாஹா தீபாராதனையும் நடந்தது. உற்சவர் உமாமகேஸ்வரர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளினார். கரோனா தொற்று ஊரடங்கு உத்தரவு காரணமாக பக்தர்கள் யாருமில்லை அர்ச்சகர்கள் மட்டுமே பங்கேற்று விழா எளிமையாக நடந்தது.

TAGS
Erode Arudra Kabaliswarar Temple

Leave a Reply