ஈரோடு கனி மார்க்கெட்டில் ஜவுளி விற்பனை மந்தம்

6 views
1 min read
er1

ஈரோடு கனி மார்க்கெட்

ஈரோடு கனி மார்க்கெட்டில் ஜவுளி விற்பனை மந்தநிலையில் உள்ளது. 

ஈரோடு மாவட்டம், கனி மார்க்கெட் ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறும். இந்த மார்க்கெட்டிற்காக மொத்த வியாபாரிகள் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதியில் இருந்தும், கேரளம், கர்நாடகம், நேபாளம், மகாராஷ்டிரம் போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் அதிக அளவு வருவார்கள். ஒவ்வொரு பருவ நிலைக்கு ஏற்ப ஆடைகள் விற்பனை செய்யப்படுவது உண்டு. லுங்கி, போர்வை, பெட்ஷீட், துண்டு, காட்டன் சேலைகள், பருத்தி ஆடைகள், குழந்தைகளுக்கான ஆடைகள் போன்றவை பல்வேறு வகைகளில் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும். 

இதனால் ஈரோடு கனி மார்க்கெட்டில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இங்கே தினசரி கடைகள் 700க்கும் மேற்பட்ட கடைகளும் வாரச்சந்தை 350க்கும் மேற்பட்ட கடைகளும் உள்ளன. தற்போது ஊரடங்கு காரணமாக பொது போக்குவரத்தை ஏதும் நடைபெறவில்லை. இதனால் ஜவுளிச் சந்தை வியாபாரம் மந்தநிலையில் உள்ளது. தற்போது ஜவுளிச் சந்தையில் தினசரி கடை வியாபாரத்தை மட்டுமே அனுமதி உள்ளது. வாரச்சந்தை அனுமதி இல்லை சாதாரண நாள்களில் ஒரு வாரத்திற்கு 3 முதல் 4 கோடி வரை வியாபாரம் ஆகும். 

பண்டிகை காலங்களில் 6 கோடி வரை வியாபாரம் ஆகும். ஆனால் தற்போது வியாபாரம் மந்த நிலையில் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் மக்களிடம் பணப்புழக்கம் குறைந்துள்ளது. இது குறித்து வியாபாரிகள் கூறும்போது, ஏற்கனவே வைரஸ் தொற்று காரணமாக மூன்று மாதமாக ஜவுளி மார்கெட் மூடப்பட்டு இருந்தது பின்னர் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளுடன் செயல்படத் தொடங்கியது. இருந்தாலும் எதிர்பார்த்த அளவுக்கு வியாபாரம் நடைபெறவில்லை. இதுவரை பத்து சதவீதம் கூட வியாபாரம் ஆகவில்லை. 

முக்கியமாக பேருந்து போக்குவரத்து இல்லாததால் மாவட்டத்தில் இருந்து வரும் மக்கள் வர முடியவில்லை. வாங்கி வைத்த துணி ரகங்கள் அப்படியே உள்ளது. வாடகை வரிப்பணம் ஊழியர்களுக்கு சம்பளம் மின் கட்டணம் வீட்டு செலவு செய்வது மிகவும் கடினமாக உள்ளது. எப்போதுதான் இந்த நிலைமை மாறும் என்று தெரியவில்லை என்று வேதனையுடன் குறிப்பிட்டனர்.

TAGS
Erode

Leave a Reply